ஸ்ரீரங்கத்தில் போட்டியில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. பாமக அறிவிப்பு.

ramdossமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் பணிகள் தற்போது களைகட்டியுள்ளது. அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியையும் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தின் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பாமக அறிவித்துள்ளது. நேற்று சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், மேலும் ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி நேற்று அமாவாசை தினத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் உடனடியாக அவர் பிரச்சாரத்தையும் விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply