பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், கடந்த 15ஆம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக பூடானுக்கு சென்று, பூடான் மன்னர் மற்றும் பூடான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான் நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பிரதமர் மோடி ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அதே தேதியில் பாராளுமன்றக்கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால், பிரதமர் தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பாராளுமன்றம் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கூட இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமரின் ஜப்பான் பயணம் ஆகஸ்ட் மத்தியில் மாற்றப்படலாம் என பிரதமர் அலுவலகம் தகவல்கள் தெரிவித்துள்ளது.