குழந்தைகளை குறிவைக்கும் “நிமோனியா” பெற்றோர்களே உஷார்!

pneumonia_003

நுரையீரல்களில் ஏற்படும் நிமோனியா என்னும் நோய், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
நுரையீரல்களின் காற்றுபைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது தான் நிமோனியா.

இந்த கிருமிகள் பாக்டீரியா அல்லது வைரஸ் வகைகளை சார்ந்தவைகளாக இருக்கலாம்.

நமது நுரையீரல் வலது பக்கத்தில் மூன்று பகுதிகளாகவும், இடது பக்கம் இரண்டு பகுதிகளாகவும்(lobes) அமைந்துள்ளன.

நிமோனியா, இவற்றில் ஒருபகுதியை மட்டும் அல்லது ஒரு நுரையீரலின் எல்லா பகுதியையும், அல்லது இரண்டு பக்கத்திலும் கூட தாக்கலாம்.

இவ்வாறு நுரையீரலின் காற்றுப் பைகள் பாதிக்கப்பட்டால், அவை செயல் இழந்துபோய் மூச்சுத் திணறல் உண்டாகிறது.

குறிப்பாக இந்த நோய் குறிவைத்து தாக்குவது குழந்தைகளையே, அடுத்ததாக முதியவர்களை தாக்குகிறது.

ஏனெனில் அவர்களுக்கே நோய் எதிப்பு சக்தி குறைவு.

நோய் அறிகுறிகள்

* அதிக வெப்பமுள்ள காய்ச்சல்

* குளிர், நடுக்கம்

* மூச்சுத் திணறல்

* விரைவாக சுவாசித்தல்

* கடுமையான இருமல்

* சளியில் நிறமாற்றம் அல்லது இரத்தம்

* சுளீர் எனும் நெஞ்சுவலி

* குழந்தைகள் சுறுசுறுப்பு குன்றிய நிலையில் உணவு உண்ணாமல் சுணங்கி காணப்படுவர்

* குழந்தைகள் மூச்சு விடும் போது மெல்லியதாகவோ அல்லது இரைச்சலுடனோ ஒருவிதே ஓசை(grunting) எழுதல்.

நோயை கண்டுபிடித்தல் (Diagnosis)

நிமோனியா என்ற சந்தேகம் எழுந்தால் உடனே மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதுபோன்றே சாதாரண சளிக்காய்ச்சல் 3 நாட்களைத் தாண்டினாலும் உடன் மருத்துவமனை செல்ல வேண்டும்.

மருத்துவர் பரிசோதனை செய்யும் பொது ஸ்டேத்தஸ்கோப் மூலம் சுவாச ஓசையைக் கேட்டாலே நிமோனியாவா என்பதைக் கூறிவிடலாம்.

ஆனால் கட்டாயமாக நெஞ்சை எக்ஸ்ரே படம் எடுத்தாக வேண்டும். அதோடு இரத்தப் பரிசோதனையும், சளி பரிசோதனையும் தேவைப்படும்.

சிகிச்சைகள்

1. நிமோனியோ காய்ச்சலை தணிக்க வெந்நீரை ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் நெஞ்சுப்பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.

2. இதனால் நுரையீரல் பகுதியில் சளி இருந்தால் அது வெளியேறும். மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கும்.

3. கடுகை அரைத்து நெஞ்சுப் பகுதியில் பற்றுப் போடலாம். ஒருசில குழந்தைகளுக்கு கடுகுப் பற்று அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை உடனே அகற்றிவிட வேண்டும்.

4. குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, தக்காளி, பப்பாளி – இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து சாறாக அருந்த கொடுக்க வேண்டும்.

5. பெரியவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டால் இஞ்சிச் சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும் அல்லது வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இவற்றைச் சாறாக்கி அருந்தவும். மூன்றாவதாக துளசிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, காரட் சாறு இந்த மூன்றையும் மாற்றி மாற்றி அருந்தவும்.

6. நிமோனியா காய்ச்சலை கட்டுப்படுத்த எள்ளுருண்டை சாப்பிடலாம் அல்லது எள்விதைகளைக் கஷாயம் வைத்து இறக்கி, ஆறியதும் உப்பும் தேனும் சேர்த்து அருந்தலாம்.

Leave a Reply