பாக்கெட்டில் ஒரு சார்ஜர்

charger_2290557f

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ள புதுமையான வசதியை ஜெர்மனி நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. போனை சார்ஜ் செய்ய மின்சாரமோ, பிளக் பாயிண்டோ தேவையில்லை. சிகரெட் லைட்டர் போல இருக்கிறது இந்த பாக்கெட் சார்ஜர். இந்த லைட்டர் உள்ளே இருக்கும் எரிவாயுவைக் கொண்டு மெல்லிய மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் தான் ஸ்மார்ட் போன் பேட்டரியை சார்ஜ் செய்கிறது.கிராப்ட்ரெக் எனும் இந்த சார்ஜரை பாக்கெட்டில் இருக்கும் மின்நிலையம் என ஜெர்மனி நிறுவனமான இஜெல்லிரான் வர்ணிக்கிறது.

லைட்டரில் பயன்படுத்தப்படும் அதே எரிவாயுவை இந்த சார்ஜரில் உள்ள செல் மின்சக்தியாக மாற்றிவிடுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு முறை எரிபொருள் கொண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட 11 சாதனங்களை சார்ஜ் செய்யலாம். மூன்று நிமிடங்களில் மீண்டும் நிரப்பி விடலாம். இதன் முன்னோட்ட மாதிரி இப்போது தயாராகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இணையம் மூலம் நிதி திரட்டும் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் இதற்காக ஆதரவு திரட்டும் பக்கத்தையும் அமைத்துள்ளது.

கிராப்ட்ரெக்கின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்: http://goo.gl/JSG743

Leave a Reply