[carousel ids=”34615,34617,34618,34619,34620,34621″]
அமெரிக்க மக்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற கறுப்பின பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ நேற்று நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவிற்கு அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கவிஞர் மாயா, நேற்று காலை 8 மணிக்கு மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக போராளி, ஆசிரியை, கவிஞர், போன்ற பல்வேறு முகங்களுடன் வாழ்ந்த கவிஞர் மாயா, பல அமைதி போராட்டங்களில் கல்ந்து கொண்டிருக்கின்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் புகழ்பெற்றதோடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது. இவர் சிறுவயதில் பாலியல் தொழிலாளி, இரவு நேர கிளப் டான்சராகவும் சில காலம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பாலியல் தொழிலாளியாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும், ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் கருப்பின பெண்கள் சந்திக்கும் இனவெறி பிரச்சனைகளையும் தனது சுயசரிதை நூலில் விரிவாக எழுதியுள்ளார். இவருடைய சுயசரிதை புத்தகத்தின் தலைப்பு கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்கு தெரியும்” என்பதுதான்.
கவிஞர் மாயாவின் மறைவிற்கு உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.