‘போகிமான் கோ’ விளையாட்டிற்கு ஈரான் அரசு தடை
உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் தற்போது அடிமையாகி இருப்பது போகிமான் கோ’ என்ற விளையாட்டிற்குத்தான். தூக்கமின்றி இரவு முழுவதும் பலர் விளையாடி வருவதாகவும், இன்னும் சிலர் சாலைகளில் நடந்து செல்லும்போது இந்த விளையாட்டை விளையாடி வருவதாகவும் இதனால் சாலை விபத்து அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் இந்த விளையாட்டிற்கு மிக அதிக நபர்கள் அடிமையாகியுள்ளனர்
இந்நிலையில் போகிமான் கோ’ விளையாட்டிற்கு ஈரான் அரசு தடை செய்துள்ளது. அமெரிக்காவை போலவே ஈரானிலும் போகிமான் கோ விளையாட்டால் சாலைகளில் விபத்துகள் ஏற்படலாம் என்றும் இதனால் நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த விளையாட்டுக்கு தடை விதித்துள்ளதாகவும் ஈரான் அரசு கூறியுள்ளது.
இந்தியாவிலும் இந்த விளையாட்டால் இளைஞர்கள் பலர் அடிமையாகியுள்ளதால் அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,