அப்பல்லோவுக்கு ஜெ. பிணமாகத்தான் வந்தார் என கூறிய பெண் கைது

அப்பல்லோவுக்கு ஜெ. பிணமாகத்தான் வந்தார் என கூறிய பெண் கைது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோதே அவருக்கு உயிர் இல்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்திய ராமசீதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தீபா பேரவையின் கூட்டம் சென்னை ஆர்.கே.நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் அப்பல்லோ மருத்துவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட ராமசீதா என்ற பெண் பேசியபோது, ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவருக்கு உயிர் இல்லை. அவரை பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ராமசீதா மருத்துவரே இல்லை என்று தெரிய வந்தது. இதனால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply