அசல் ஓட்டுனர் உரிமம்: காவல்துறை புதிய விளக்கம். வாகன ஓட்டிகள் நிம்மதி
இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் தற்போது காவல்துறை இதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளது.
அசல் ஓட்டுனர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை எதுவும் காவல்துறை நடத்தாது என்றும், அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஆகிய ஆறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினர்களிடம் பிடிபடும்போது மட்டும் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என்றும் விளக்கம்ப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை அடுத்து வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.