3 மாநில காவல்துறையினர்களுக்கு கண்ணாம்பூச்சி காட்டும் கர்ணன்

3 மாநில காவல்துறையினர்களுக்கு கண்ணாம்பூச்சி காட்டும் கர்ணன்

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் நீதிபதி கர்ணன் திடீரென தலைமறைவானார்.

நீதிபதி கர்ணன் சென்னை மற்றும் காளகஸ்தியில் இருப்பதாக வெளிவந்த தகவல்களை அடுத்து தமிழகம், ஆந்திர போலீசார்களின் உதவியோடு கொல்கத்தா போலீசார் கர்ணனை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை கர்ணன் மூன்று மாநில போலீசார் கண்களில் படாமல் கண்ணாம்பூச்சி ஆடி வருகிறார்.

நேற்று மாலை அவருடைய செல்போன் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் சிக்னல் இருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழக காவல்துறை கர்ணனின் மகன் வீடு அமைந்திருக்கும் சூளைமேடு பகுதிக்கும், அவரது சொந்த ஊரான கடலூருக்கும் தனிக்குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் அங்கிருந்து விரைவில் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply