பெண் போலீஸ் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக எழுந்த புகார் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் என்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் ஏழுமலை என்ற இன்ஸ்பெக்டர் என்பவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறை அதிகாரி, விழுப்புரம் மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தாதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து முத்தம் கொடுத்த ஏழுமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.