லைகா நிறுவனத்திற்கு சென்னை போலீஸ் பாதுகாப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஏப்ரல் 8ஆம் தேதி இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் விழா ஒன்ரை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதாக கூறியிருந்த ரஜினிகாந்த் திடீரென பின்வாங்கி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் ரஜினியை தவறாக வழிநடத்திவிட்டதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு ராஜபக்சே குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக பொய்யான தகவலை தமிழக அரசியல்வாதிகள் பரப்பி வருவதாகவும் லைகா நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
இதனால் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்திற்கு நேற்று இரவு முதல் திடீரென காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.