முதல்வர் உடல்நிலை எதிரொலி: திமுக தலைவர்கள் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

முதல்வர் உடல்நிலை எதிரொலி: திமுக தலைவர்கள் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

1தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூரில் உள்ள கருணாநிதி பெயர் கொண்ட பஸ்நிலையத்தில் பெயர்ப்பலகை அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் திமுக தலைவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்களுடைய இல்லங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மற்றும் சி.ஐ.டி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்ணா அறிவாலயம், ஸ்டாலின், அன்பழகன் வீடுகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமே இன்று காலை பேருந்து நிலையங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாகவும், இயங்கும் ஒருசில பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இன்றி காணப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply