அரசியல் பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

அரசியல் பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசினார். போர் வரும்வரை காத்திருப்போம் என்றும் அதுவரை அமைதியாக இருப்போம் என்று ரசிகர்களிடையே அவர் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் ரஜினியின் அரசியல் பேச்சால் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது. இதனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து, தமிழர் முன்னேற்றப்படை கி.வீரலட்சுமி தலைமையில், இன்று காலை 11.30 மணி அளவில், போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஜினியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினிக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க தெரிவிக்க அவருக்குக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply