தலைமறைவான படத்தயாரிப்பாளர். பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை?
ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்புக்கொண்ட முதல்படம் ‘பென்சில்’. ஆனால் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘டார்லிங்’ முதலில் ரிலீஸ் ஆனது. அதன்பின்னர் வரும் செப்டம்பரில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ‘பென்சில்’ பட தயாரிப்பாளர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர்களிடமும் போலீஸார் விசாரணை செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பென்சில் பட தயாரிப்பாளர் சண்முகம், வேறு பல தொழில்கள் செய்து கொண்டிருந்ததாகவும், அந்த தொழிலில் பல மோசடி புகார் எழுந்ததால் அவரை விசாரணைக்கு வருமாறும் போலீஸார் அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென சண்முகம் தலைமறைவு ஆனதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் போலீஸாரின் தீவிர வேட்டைக்கு பின்னர் சமீபத்தில் சண்முகம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான மோசடி புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், அவர் தயாரித்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்ற முறையில் விரைவில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யாவிடம் காவல்துறை விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.