காவிரி விவகாரம்: திமுகவை விமர்சனம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்கள்

காவிரி விவகாரம்: திமுகவை விமர்சனம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தற்போது சூடுபிடித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக, அடுத்தடுத்து போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 4ம் தேதி வரை தொடர் போராட்டம் என்றும் 5ம் தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்பு என்றும் திமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்கு மூலகாரணமே திமுக தான் என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தலைவர்கள் கூறியதை பார்ப்போம்

தமிழிசை செளந்திரராஜன்: காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் தாமதமாக திமுகவே காரணம். மத்தியில் காங். ஆட்சியின் போது வழக்குகளில் இருந்து தப்பிக்க, திமுக காவிரி பிரச்சினையை முன்னெடுக்கவில்லை

வானதி சீனிவாசன் : திமுக-வும் ஸ்டாலின் அவர்களும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய, கையெழுத்திட்ட ஒவ்வொரு திட்டங்களையும் தற்போது எதிர்கட்சியாக இருப்பதால் அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் தொடுத்து வருவது குறைந்தபட்ச அரசியல் அறம் கூட திமுக-விற்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது

பிரேமலதா: காவிரி விவகாரத்தில் சோனியா காந்திக்கு திமுக அழுத்தம் கொடுக்க வேண்டியதுதானே.

Leave a Reply