தமிழக முதல்வர் விரைவில் குணமாக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் விரைவில் பரிபூரண குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவல் தெரிந்ததும் தான் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், விரைவில் அவர் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பா பல தேசிய தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.
இதேபோல் திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என தங்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.