புதுவை முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலதிபர் திடீர் தற்கொலை
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டமன்றப் பொதுத்தேர்தலின் முன்னாள் முதல்வரும் தற்போதைய சபாநாயகருமான வைத்திலிங்கம் அவர்களை எதிர்த்து போட்டியிட்டவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தர்மாபுரியைச் சேர்ந்த தொழிலதிபருமான தயாளன்.
இந்தத் தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார் தயாளன். இந்த நிலையில் தொழிலதிபர் தயாளன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்ததும் தயாளன் வீட்டுக்குச் சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்த முக்கிய பிரபலம் திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.