அரசியல்வாதிகளின் பொறியியல் கல்லூரிகள் எந்த லட்சணத்தில் உள்ளது. தெரிந்து கொள்ளலாமா?

அரசியல்வாதிகளின் பொறியியல் கல்லூரிகள் எந்த லட்சணத்தில் உள்ளது. தெரிந்து கொள்ளலாமா?

collegeதமிழகத்தின் அரசியல்வாதிகளில் பலர் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பணம் கொழிக்கும் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளை பல அரசியல் தலைவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது அரசியல்வாதிகள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து தற்போது பார்ப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விகிதத்தில் 295-வது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு பயின்ற 1510 மாணவர்களில் 802 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 53.11 சதவீதமாகும்.

திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரைமுருகன் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி 71.69 சதவீத தேர்ச்சியுடன் 91-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் எ.வ.வேலு  திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். இந்த கல்லூரியில் பயின்ற 3078 மாணவர்களில் 1936 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 62.90 சதவீதம் ஆகும். இந்த கல்லூரி 174-வது இடத்தை பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த கே.என்.ராமச்சந்திரன் திருவள்ளூரில் ஷக்தி பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். இந்த கல்லூரி 72.82 சதவீத தேர்ச்சியுடன் 82-வது இடத்தை பெற்றுள்ளது.

திமுகவைச் சேர்ந்த பொங்கலூர் பழனிச்சாமி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற பெயரில் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். அந்த கல்லூரி 59.51 சதவீத தேர்ச்சியுடன் 210-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திமுகவின் மற்றொரு முக்கிய பிரமுகரும் முன்னாள் கல்வி அமைச்சருமான பொன்முடி நடத்தும் சூர்யா பொறியியல் கல்லூரி 36.77 சதவீதத்துடன் 434-வது இடத்தைப் பிடித்துள்ளது

Leave a Reply