ரஜினியின் அரசியல் பேச்சுக்கு அரசியல்வாதிகளின் ரியாக்சன்

ரஜினியின் அரசியல் பேச்சுக்கு அரசியல்வாதிகளின் ரியாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியலுக்கு வருவது குறித்து ஜாடை மாடையாக பேசி வந்தாலும் இந்த முறை அவர் பேசியது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று அவர் பேசிய பேச்சில் அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வேன் என்றும் யாரை ஒதுக்கி வைப்பேன் என்றெல்லாம் கூறியதை பார்த்தால் அவரது அரசியல் பிரவேச அறிக்கை மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்களை பார்ப்போம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ‘ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: ‘நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற துடிக்கின்றது. அவர் அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவே|ற்கும்’

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: ‘நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம், ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது தான் பாஜகவின் கருத்து. அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலுக்கு வரும் போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து’ என்று கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், பாஜகவுக்கு வந்தாலும் வரவேற்போம்

Leave a Reply