இந்திய அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாங்கிய நன்கொடைகள் குறித்த கணக்கு வழக்குகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு காரணமாக திமுக, அதிமுக உள்பட நாட்டின் பல கட்சிகள் தங்களுக்கு தேர்தல் சமயத்தில் வந்த நன்கொடைகளின் விவரங்களை தாக்கல் செய்துள்ளது.
இதன்படி மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சுமார் ரூ.1.40 கோடியும், உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி ரூ.1.69 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தங்கள் கட்சிக்கு எவ்வித நன்கொடையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. இறுதிக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.