தினகரன் -சுதாகரன் திடீர் சந்திப்பு? அதிமுகவில் பரபரப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதிமுக தலைவர்கள் பெங்களூர் சென்று இதுவரை சசிகலாவை மட்டுமே பார்த்து வந்த நிலையில் யாரும் சுதாகரனையும் இளவரசியையும் கண்டுகொள்வதே இல்லை
இந்த நிலையில் நேற்று சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்ற தினகரன், சுதாகரனையும் இளவரசியையும் சந்தித்துள்ளார். குறிப்பாக சுதாகரனிடம் சுமார் 40 நிமிடங்கள் அவர் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
தினகரன் – சுதாகரன் சந்திப்பில் அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் சென்னை திரும்பும் தினகரன் விரைவில் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.