வடகொரியாவுக்கு திடீரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றது ஏன்?
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்ப்பியோ வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகருக்கு சென்றதாக ஊடககங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் மூன்று அமெரிக்கர்களை வடகொரியா அரசு கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், அவர்களை அழைத்து வரவே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா சென்றதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
விரைவில் வடகொரியா அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் மூன்று அமெரிக்கர்களை வடகொரியா விடுதலை செய்துள்ளது. மூன்று அமெரிக்கர்கள் விடுதலை செய்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.