பீட்டா அமைப்பை பற்றி பேசுவதையே அவமானமாக கருதுகிறேன்: பொன் ராதா கிருஷ்ணன்

பீட்டா அமைப்பை பற்றி பேசுவதையே அவமானமாக கருதுகிறேன்: பொன் ராதா கிருஷ்ணன்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில் நேற்று இரவு போராட்டக்காரர்களின் குழுவினர்களுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் பீட்டா அமைப்பை பற்றி பேசுவதையே அவமானமாக கருதுவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டகாரர்கள் விரும்பினால் மத்திய சுற்றுப்புறசூழல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்ககோரி இளைஞர் குழுவினர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட பொன் ராதா கிருஷ்ணன், விரைவில் பிரதமரையும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரையும் சந்திக்க டெல்லி செல்வதாக உறுதி அளித்தார்.

ஏற்கனவே முதல்வர் ஓபிஎஸ், அதிமுக எம்பிக்கள் ஆகியோர் டெல்லி சென்றுள்ள நிலையில் தமிழக மத்திய அமைச்சரும் டெல்லி செல்வது போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

Leave a Reply