புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஆசிரியர்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
ஆங்கிலத்தில் – 05
கணிதம் -03
அறிவியலில் – 05
பிரஞ்ச் மொழியில் – 01
பிரஞ்ச் மொழியறிந்த கணிதம் பிரிவில் – 01
மலையாளம் பிரிவில் -04
சமூக அறிவியல் -01
வயதுவரம்பு: 14.02.2014 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்ச்சி செய்யப்படும் முறை: மொத்த மதிப்பெண்கள் 100 என்றும் அதில் கல்வித் தகுதிக்கு 85 சதவிகித மதிப்பெண்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 15 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மேற்கண்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.py.gov.in, http://schooledn.puducherry.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director,
Directorate of School Education,
Perunthalaivar Kamarajar Centenary Educational Complex,
100 Feet Road,
Anna Nagar,
Puducherry 605 005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2014