தை பொங்கலை சிறப்பிக்கும் மஞ்சள், பானை, கூட்டு!

pongal pot 500 2மிழர்களால் வெகு விமரிசையாக  கொண்டாடப்படும் விழாக்களில் தலையானது தைப்பொங்கல். வெளிநாடு வாழ் தமிழர்களாலும்  கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் இயற்கைக்கும், தங்கள் தொழிலில் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக பொங்கலை கொண்டாடுகின்றனர்.

பல நூறு வருடங்களுக்கு முன் நம் தமிழ் பெண்கள் மழை வருவதற்கும், அறுவடை  நல்ல படியாக நடக்கவும், விளைச்சல் அமோகமாக இருக்க இந்த விழாவை ஒரு நோன்பாக  கடைபிடித்ததாக சொல்லப்படுகிறது.

பொங்கலில் மஞ்சளின் பங்கு

மஞ்சள் இருக்கும் இடத்தில திருமகள் வாசம் செய்கிறாள் என்பது தமிழரின் நம்பிக்கை. அதனால் தன் பெண்கள் தங்கள் உடலில் மஞ்சள் பூசுகிறார்கள். புது உடைகள், சுப நிகழ்ச்சி பத்திரிகைகள் என மங்களகரமான நிகழ்வுகளில் மஞ்சளின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் வழங்கப் படுகிறது. “மங்கள நாண்” என்று சொல்லப்படும் தாலிக் கயிற்றில் மஞ்சள் பூசப்படுகிறது.

மஞ்சளுக்கு புனித தன்மை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் பூர்வமாகவும் சில காரணங்கள் உண்டு. தொற்று நோய் பரவாமல் தடுக்கும்  எதிர்ப்பு சக்தி அதில் உண்டு. இயல்பாகவே எல்லாரையும் கவரும் நிறம் உள்ளதால் இதை நாம் அதிக அளவில் நம்  வீட்டு சமையல்களில் பயன்படுத்துகிறோம், அது மட்டும் அல்லாமல் மஞ்சள் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் உழவர்களின் தினமான பொங்கல் அன்று பொங்கல் பானைகளில் மங்களகரமாக மஞ்சள் கட்டப்படுகிறது.

சென்ற வருடத்தை விட இவ்வருடம் அதிக மழையினால் அமோக விளைச்சல் கிட்டி இருபதாகவும் வியாபாரம் நன்றாக இருப்பதாகவும் கூறுகின்றனர் திருச்சி ஸ்ரீரங்கம் சந்தை வியாபாரிகள்.

பொங்கலில் பானையின் முக்கியத்துவம்

தை பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்னரே கொண்டாட்டங்களை தொடங்கி விடுவர். பொங்கள் பண்டி கைக்கு முதலில் வாங்கப்படும் பொருள் பானை. பெண்கள் பானைகள், மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களையும் தயார் செய்ய ஆரம்பிப்பார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு பொங்கல் சீர் வழங்குவார்கள். திருச்சியில் பல்வேறு இடங்களில் வண்ண நிறங்களில் பொங்கல் பானைகள் செய்யபடுகின்றன.

விற்பனையாளர் ஒருவரிடம் பேசினோம்.  “கலர் பானைகள் விற்கும் பொழுது தங்கள் மகளுக்கு சீர் செய்ய வேண்டும் என நினைபவர்கள் அதிக அளவில் வாங்கி செல்வர். தற்போதைய நாகரீக உலகில், அலுமினியம், பித்தளை, சில்வர் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

மண் பாண்டங்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இருந்தும், விஷேச நாட்களில் மட்டும், மண் பானைகளுக்கு வரவேற்பு இருப்பதால், குடிசை தொழிலாக செய்து வருகிறோம். இதில் ஈடுபட்ட பலர் இன்று வேறு  தொழில்களுக்கு சென்றுவிட்டனர்“ என்கின்றனர்.

பொங்கலிலே சமைக்க படும் கூட்டு

நம் முன்னோர்கள் “வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்த கலவை என்பதை உணர்த்தும் வகையில் காரமும் இனிப்பும் கலந்த கலவையாக மொச்சகொட்டை, கிழங்கு வகைகள்போன்ற காய்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கூட்டு பொரியல்லாக தை திருநாள் அன்று சமைப்பர். அவரை,மொச்சகொட்டை,பரங்கிக்காய்  காய்களை கலவையாகவே திருச்சியிலே விற்பனை செய்கின்றனர்.

நாமும் தை திங்களை பொங்கல் பானை ,கரும்பு, மஞ்சளுடன் இனிதே கொண்டாடுவோம். 

Leave a Reply