ஆட்டம் முடிந்துவிட்டது. அடக்கி வாசியுங்கள். ராஜபக்சேவுக்கு பொன்சேகா எச்சரிக்கை.

rajapakseஇலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆட்டம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது. அதனால் அவர் அடக்கிவாசிக்க வேண்டும் என இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகா, இலங்கை அரசின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க பொதுமக்கள் தயாராக இல்லை.

வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் ராஜபக்சேவுக்கு வழங்கக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டது. அதிபர் ராஜபக்சேவிடம் இருந்து ஆட்சி கைமாறப் போகின்றது. எனவே இனியாவது அவரது அரசாங்கம் அடக்கி வாசிப்பது நல்லது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இது பொருந்தும் என்றவாறு சரத் பொன்சேகா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply