ரஜினியை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரின் மகள்

ரஜினியை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரின் மகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து அவரை பல அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பாஜகவில் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் புரமோத் மகாஜனின் மகளும், பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான ‘பாரதிய ஜனதா யுவ மோர்சா’வுக்குத் தலைவருமான பூனம் மகாஜன் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இருவரும் அரசியல் குறித்து விவாதித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பு குறித்து பூனம் மகாஜன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும்போது, “நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி, லதா ஜி அண்ட் தலைவா” என்று பதிவு செய்ததோடு, ரஜினி மற்றும் லதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply