உலகப்புகழ் பெற்ற ‘பாப் பாடகர் பிரின்ஸ்’ மர்ம மரணம். ஒபாமா இரங்கல்

உலகப்புகழ் பெற்ற ‘பாப் பாடகர் பிரின்ஸ்’ மர்ம மரணம். ஒபாமா இரங்கல்
prince
உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ரோஜர்ஸ் நெல்சன் நேற்று அமெரிக்காவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களால் பிரின்ஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இவர் ரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்

அமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியேபோலிஸ் என்ற நகரில் வசித்து வந்த பாடகர் பிரின்ஸ் நேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரின்ஸ் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிரின்ஸ் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது சவுதி அரேபியா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒபாமா சற்று முன்னர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “பிரின்ஸின் திடீர் மரணத்தால் துயரப்படும் உலகின் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் வரிசையில் நானும் மிச்சேலும் இணைந்து வருந்துகிறோம்.

இசையின் உண்மையான வடிவத்தை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று பிரபலப்படுத்திய வெகுசிலரில் பிரின்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞராவார். இசையில் பல புதிய பரிணாமங்களை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இசையுலகின் சிருஷ்டிகர்த்தாவாக திகழ்ந்த அவரை பிரிந்து வாழும் குடும்பத்தார், இசைக்குழுவினர் மற்றும் அவர்மீது பேரன்பு வைத்திருக்கும் அனைவருடனும் எங்களது எண்ணமும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Chennai Today News:Barack Obama mourns death of ‘creative icon’ Prince

Leave a Reply