நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் !! எச்சரிக்கை

popcorn

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்…

நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை.

சோளம் உடலுக்கு நல்லதுதான்., நார்ச்சத்து நிறைந்ததுதான்.

கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான்… சந்தேகமே இல்லை.

ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்…

வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே!.

100 கிராம் அளவுள்ள இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்டை பொரித்தால் கிடைப்பது, 510 கலோரிகள்… 55 கிராம் கார்போஹைட்ரோட், 58 கிராம் கொழுப்பு அமிலங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து… அவ்வளவுதான்!

பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.

அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டைஅசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது!

‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது.

இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க.

Leave a Reply