போப் பிரான்சிஸ் அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு முதல் முறையாக பயணம்
பல ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் பகையை மறந்து சுமூக உறவு கொள்ள பெரும் முயற்சி எடுத்த போப் பிரான்சிஸ் அவர்கள் முதல்முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏழைகளின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வரும் போப் பிரான்சிஸ், அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடைமுறைகளை விமர்சித்துள்ளார். எனவே கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் க்யூபாவின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மதிப்புகுரியவராக உள்ளார். எனினும் அமெரிக்கா தொடர்பான விமர்சனம் காரணமாக அந்நாட்டில் போப் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூப அதிபர் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கியூபா மீது பொருளாதாரத் தடையை தளர்த்துவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்த பிறகு இரு தலைவர்களும் முதல்முறையாக பேசியுள்ளனர்.