எலிசபெத் நேற்று முன் தினம் வாடிகன் நாட்டிற்கு பயணம் செய்தார். கிறிஸ்துவர்களின் புனித தலைவரான போப்பாண்டவரை ராணி எலிசபெத் நேரில் சந்தித்தார். அப்போது அவர் போப்பாண்டவருக்கு பீர் பாட்டில், தேன், முட்டை, மற்றும் விஸ்கி பாட்டில்களை பரிசாக கொடுத்தார். மேலும் தனது எஸ்டேட்டில் விளைந்த ஏராளமான பொருட்களையும் போப்பாண்டவருக்கு கொடுத்துள்ளார்.
வெறும் 17 நிமிடங்கள் மட்டுமே போப்பாண்டவர், ராணியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறாது. ராணிக்கு போப்பாண்டவர் மொத்தம் 37 நிமிடங்கள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்ததாகவும், ராணி அவர்கள் 20 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. காலதாமதமாக வந்ததற்கு ராணி, போப்பாண்டவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பு 17 நிமிடங்கள் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தனது எஸ்டேட்டிலிருந்து மேலும் பல பொருட்களை ராணி எலிசபெத் பிரத்யேகமாக கொண்டு சென்று, போப் ஆண்டவரிடம் அளித்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.