ஆபாச நடிகை படத்துடன் ஸ்வைப் கார்டு. போட்டி போட்டு வாங்கிய இளைஞர்கள்
தைவான் நாட்டில் ஜப்பான் நாட்டு ஆபாச நடிகையின் புகைப்படத்துடன் வெளியான ஸ்வைப் கார்டை இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதால், அந்த ஸ்வைப் கார்டு வெளியான நான்கே மணி நேரத்தில் முற்றிலும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தைவான் நாட்டில் உள்ள உள்ள ஈசி கார்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்துடன் புதியதாக வெளியிடும் ஸ்வைப் கார்டில் ஜப்பான் நாட்டின் ஆபாச நடிகையின் புகைப்படம் பதிவு செய்யப்படும்க் என அறிவித்திருந்தது.
முதல் கட்டமாக 15 ஆயிரம் ஸ்வைப் கார்டுகள் அச்சிடப்பட்டு, அவை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ஸ்வைப் கார்டை வாங்க இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போட்டி போட்டதால் அந்த கார்டுகள் வெளியான 4 மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.
ஜப்பானிய ஆபாசப்பட நடிகை யூய் ஹட்டானோ அந்த ஸ்வைப் கார்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படத்துடன் வாங்கி சென்ற இளைஞர்கள் ஏதோ பெரிய சாதனையை செய்தது போன்று சென்றது பார்க்க வேடிக்கையாக இருந்தது
ஆனால் ஆபாச பட நடிகை யூய் ஹட்டானோ புகைப்படத்துடன் காணப்பட்ட அந்த ஸ்வைப் கார்டுகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் இதன் மூலம் கிடைத்த லாபத்தை சமூகப்பணிகளுக்கு செலவிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.