குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3.58 லட்சம் பரிசு. போர்த்துகீசிய அரசு வினோத அறிவிப்பு

baby birthபோர்த்துகீசிய நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3.58 லட்சம் அன்பளிப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது எப்படி? என்று அரசும், அரசு அதிகாரிகளும் ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்கும் நிலையில் போர்த்துகீசிய நாட்டில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துவிட்டதால் அந்நாட்டு அரசு குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 ஆயிரம் யூரோ பரிசளிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துகீசிய நாட்டில் உள்ள பெரும்பாலானோர் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதை பெரிய சுமையாக பலர் நினைத்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் அந்நாட்டில் பெருமளவு குறைந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமான அளவிற்கு உயரும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Leave a Reply