ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ.
போர்த்துகீசிய நாட்டில் கடந்த சனிக்கிழமை பற்றிய காட்டுத்தீ தொடர்ந்து ஒருவாரமாக எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீவிபத்து காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 157 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீயை கட்டுப்படுத்த அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து விமானத்தில் இருந்து தண்ணீரை கொட்டி தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் காற்று வேகமாக வீசுவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
400 தீயணைப்பு வண்டிகளும் சுமார் 1150 தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த இரவுபகலாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக 26000 ஹெக்டேர் நிலத்தில் இருந்த மரங்கள் சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது.