ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட் என்ற உயர்கல்வி நிலையத்தில் வேளாண் மேலாண்மை முதுகலை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: Post Graduate Diploma in Management Agriculture
கால அளவு: 2 ஆண்டுகள்
மொத்த இடங்கள்: 30
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 4 வருட பட்டப் படிப்பில் வேளாண் தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கேட் 2014/ சிமேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு அழைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300. இதனை மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் www.naam.ernet.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பிய பின் அதனை நகல் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்திற்கான டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் ஜனவரி 15க்குள் செலுத்த வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.