மோடி-ராமர், நவாஸ்-ராவணன். உபியில் பட்டையை கிளப்பும் போஸ்டர்கள்

மோடி-ராமர், நவாஸ்-ராவணன். உபியில் பட்டையை கிளப்பும் போஸ்டர்கள்

1
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரின் முக்கிய வீதிகளில் பிரதமர் மோடியை ராமராகவும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை ராவணனாகவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ராவணின் மகன் மேகநாதனாக சித்தரித்தும் கருத்துப்படம் வரையப்பட்டுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி அம்மாநிலம் காணப்படுகிறது.

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை பாராட்டும் வகையில் மேற்கண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக் உ.பி மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்திய ராணுவம் கூறுவது போல சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருவதால், பாகிஸ்தானின் பிரசாரத்தை பொய்யாக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி ராமாயண புராணத்தின்படி ராவணணின் மகனான மேகநாதனுடன் கெஜ்ரிவாலை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2

Leave a Reply