என்னென்ன தேவை?
உருளைக் கிழங்கு, வெங்காயம் – 2
பாசுமதி அரிசி – 2 கப்
பூண்டு – 6 பல்
பிரியாணி இலை – 3
சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். 1 கப் அரிசியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். சாதத்தை ஆறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுப் பிரியாணி இலையைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் உருளைக் கிழங்கைச் சேர்த்து நன்றாக வறுக்கவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். உருளைக் கிழங்கு நன்றாக வெந்ததும் மிளகுத் தூள் சேர்க்கவும். வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் சேர்த்துக் கிளறவும். சோயா சாஸ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.