பொட்டெட்டோ பிரிட்டர்ஸ்

potato-fritters212
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு                    – 1/2 கிலோ

பச்சரிசி மாவு வறுத்தது        – 1/2 கப்
கடலை மாவு                             – 1/2 கப்
மிளகாய் பொடி                         – 1 டீஸ்பூன்
சோடா உப்பு                               – 1 சிட்டிகை
உப்பு                                               – தேவையான அளவு
எண்ணெய்                                  – பொரிக்க

செய்முறை

உருளைக்கிழங்கை தோல் சீவி 2 இன்ச் நீளத்திலும், 1 இன்ச் கனத்திலும் நீளமாக வெட்டிக் கொள்ளவும். இதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெய் இல்லாமல் பொரித்த கிழங்கை டிஷ்யூ பேப்பரால் துடைத்துக் கொள்ளவும். பச்சரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி, சோடா உப்பு, உப்பு ஆகியவற்றை கலந்து தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். பொரித்த உருளைக்கிழங்கை இந்த மாவில் போட்டு புரட்டி எடுத்து 5 நிமிடம் காய வைக்கவும். பின்னர் திரும்பவும் மசாலா தடவிய உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி தூவி சாஸீடன் பரிமாறவும்.

Leave a Reply