உருளைக்கிழங்கு ஆம்லெட்

தேவையானவை

உருளைக்கிழங்கு – 1
முட்டை – 3
கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள் – சிறிது
பச்சை மிளகாய் – தேவைகேற்ப
உப்பு/ எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்,உருளைக்கிழங்கைத் துருவிக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.

இந்த கலவையுடன் துருவிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கலக்கி ஆம்லெட்டுகளாக ஊற்றி சூடாக பரிமாறுங்கள்.

Leave a Reply