செவ்வாயில் உருளைக்கிழங்கு

செவ்வாயில் உருளைக்கிழங்கு

marsவிண்வெளி வீரர்களின் உணவு தேவைகளுக்கு அங்கேயே பயிர் செய்ய ஆராய்ந்து வருகிறது நாசா. செவ்வாயில் நிலவும் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு விளைவிப்பதற்கான முயற்சிகளிலும் உள்ளது. இதற்காக பெரு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் செவ்வாய் கிரக சூழலைப்போல ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளனர். மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 284 டிகிரி செல்சியஸ் வரையிலான சீதோஷ்ண நிலையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உணவாகும் பாட்டில்

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கடல்பாசியை மூலப் பொருளாகக் கொண்டு பாட்டில் ஒன்றை தயாரித்துள்ளார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த மாணவர். இந்த பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்ச்சியான பானங்களை அடைக்கலாம். பாட்டிலுக்குள் குடிநீர் இருக்கும் வரை அதன் வடிவமைப்பு மாறாது. பாட்டிலில் உள்ள குடிநீர் தீர்ந்தபிறகு தானாகவே பாட்டில் சுருங்கி விடும். அடுத்த கட்டமாக இப்படி சுருங்கும் குடுவையை மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ப தயாரிக்கும் முயற்சிகளிலும் உள்ளார்.

Leave a Reply