தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
காலி ஃப்ளவர் – 1
கொத்துமல்லி – சிறிதளவு
புதினா – ஒரு கைப்பிடி
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
ஆட்டா மாவு – 200 கிராம்
பட்டை கிராம்பு – 6
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 6
மஞ்சள் தூள் – ¼
காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
குங்குமப் பூ – 1 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
டால்டா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தயிர் – ½ கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் நெய், டால்டா சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா வேக வைத்துள்ள பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் மற்றும் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர் அதனுடன் தயிர், புதினா, கொத்துமல்லி, தயாரித்து வைத்துள்ள சாதம், தேவையான உப்பு, குங்கும பூ, நெய் சேர்த்து தம் போடவும்.
தம் போடும் போது 5 நிமிடம் அதிக தீயும் பிறகு 15 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசி தண்ணீர் சேர்த்து 50% முதல் 60% வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆட்டா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
சப்பாத்தி போல தயாரித்து வைத்துக் கொள்ளவும். இதன் நடுவில் மேலே தயாரித்து வைத்துள்ள பிரியாணி இட்டு மூட வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு இந்த மூடப்பட்டுள்ள சப்பாத்தியை இரண்டு நிமிடத்தில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.