சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை

சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை

solomon-islandசாலமன்தீவுகளில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் அந்த பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும் உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்தோனேஷியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100 பேர்களுக்கும் மேல் மரணம் அடைந்த நிலையில் தற்போது சாலமன் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த செய்திக்குறிப்பில் தெற்குபசிபிக் கடல் பகுதியில்உள்ள தீவு நாடான சாலன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து உயிர் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை

Leave a Reply