முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுக்கு அதிகாரமிக்க பதவி. ஜனாதிபதி-பிரதமர் முடிவு

முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுக்கு அதிகாரமிக்க பதவி. ஜனாதிபதி-பிரதமர் முடிவு
chandhrika
இலங்கை ஜனாதிபதியாக 11 வருடங்கள் இருந்த சந்திரிகா குமாரதுங்கா அவர்களுக்கு புதிய அதிகாரம் உள்ள பதவி கொடுக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் முடிவு செய்திருப்பதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

 இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சந்திரிகாவை, மகிந்தா ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் டம்மியாக்கினார். இதனால் மனம் வெறுத்த சந்திரிகா ராஜபக்சே ஆட்சியில் இருந்து இறங்கும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்படதும் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த சந்திரிகா, புதிய அரசுக்கு ஆதரவு கொடுத்தார். மேலும் தனது 11 வருட அதிபர் பதவியின் அனுபவம் மூலம் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவுக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அதை தொடர்ந்து தேசிய அளவில் அதிபர் மற்றும் பிரதமருக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி வழங்கப்பட உள்ளது.

இதற்கு அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தேசிய நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றின் மீதான பொறுப்பு கொண்டதாக இப்பதவி அமைய உள்ளது. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது பயணம் முடிந்து நாடு திரும்பிய பின்னர் இப்பதவியில் சந்திரிகா குமாரதுங்கா நியமிக்கப்படுகிறார். இப்பதவியை ஏற்க அவர் விருப்பம தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply