மியான்மர் நிலநடுக்கத்தில் பழமையான கோவில்கள் சேதம்

மியான்மர் நிலநடுக்கத்தில் பழமையான கோவில்கள் சேதம்

1நேற்று காலை இத்தாலியில் 6.2 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 38 பேர்கள் வரை பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டிலும் சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கட்டப்பட புகழ்பெற்ற கோவில்கள் சேதமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பூமிக்கடியில் 84 கி.மீ. ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பழம்பெரும் நகரமான பாகன் நகரத்தில் உள்ள புகழ்மிக்க பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் சேதம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் 10-வது மற்றும் 14-வது நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

2500க்கும் அதிகமான புராதன புத்த நினைவுச்சின்னங்கள் அடங்கிய இப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பூகம்பம் காரணமாக உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மியான்மரில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா, வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் இருந்தது.

Leave a Reply