ரஜினி ரசிகர்களை விட பவர்ஸ்டார் ரசிகர்கள் எவ்வளவோ மேல். ராம்கோபால் வர்மா

ரஜினி ரசிகர்களை விட பவர்ஸ்டார் ரசிகர்கள் எவ்வளவோ மேல். ராம்கோபால் வர்மா
ramgopal varma
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா பவர்ஸ்டார் பவன்கல்யாண் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பவர்ஸ்டார் ரசிகர்கள் டுவிட்டரில் அவரை காய்ச்சி எடுத்துவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் இனிமேல் பவர்ஸ்டார் குறித்து டுவிட் செய்ய மாட்டேன்’ என்று கூறினார்.

இந்நிலையில் அழகு, திறமை, டான்ஸ், ஆகிய எதுவுமே இல்லாமல் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார் என்றே தெரியவில்லை என்று நேற்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்து மட்டுமின்றி ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் ராம்கோபால்வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ரஜினி ரசிகர்கள் ஒருபடி மேலே தரக்குறைவான வார்த்தைகளால் ராம்கோபால்வர்மாவை டுவிட்டரில் திட்டி வருகின்றனர்.

இதனால் நொந்துபோன ராம்கோபால்வர்மா, ரஜினி ரசிகர்களைவிட பவர்ஸ்டார் ரசிகர்கள் எவ்வளவோ பரவாயில்லை. ரஜினியை நான் பெருமையாகத்தான் கூறினேன். ஆனால் ரஜினி ரசிகர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை திட்டி வருகின்றனர் என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply