“ரஜினியை சந்தித்தது விவசாயியை அவமதிக்கும் செயல்” பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நதிநீர் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நதிநீர் இணணப்பிற்காக கொடுப்பதாக கூறிய ரூ.1 கோடியை பிரதமரிடம் வழங்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் ரஜினியை அய்யாக்கண்ணு சந்தித்தது ஒரு விளம்பர நோக்கம் என்றும் அய்யாக்கண்ணு விவசாயியை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனையில் விவசாயிகளை ஆதரிக்காத ரஜினிகாந்தை, தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது குரல் கொடுக்காத ரஜினிகாந்தை அய்யாக்கண்ணு சந்தித்து நதிநீர் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாயை கேட்டிருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று அனைத்திந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.