சிங்கள ராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கதை தமிழில் திரைப்படமாகிறது.
கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அதன்பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கிய சம்பவத்தை மையமாக வைத்து தமிழ்த்திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
புலிப்பார்வை என்ற பெயருடைய இந்த படத்தில் பாலச்சந்திரனாக நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து பின்னர் பொருத்தமான ஒரு சிறுவனை தேர்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
இந்த படத்தின் பிரவின்காந்த் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். சிங்கள் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போர்கள், மற்றும் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் செய்த படுகொலைகள், மனித மீறல்கள் ஆகியவைகளும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கின்றது.