மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நேற்று 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மத்திய இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தனிப்பொறுப்புடன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இலாகாவை அவர் கவனிப்பார்.மேலும் அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர். இலாக்காக்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஃபாகன் சிங் குலாஸ்தே, எஸ்.எஸ். அலுவாலியா, ரமேஷ் சாந்தப்பா, விஜய் கோயல், ராஜென் கோகென்,அனில் மாதவ் தேவ், பர்சோட்டம் ரூபாலா, எம்.ஜே. அக்பர், அர்ஜுன் ராம் மேக்வால், ஜஷ்வந்த் சிங் பாஷ்வால், மகேந்திரநாத் பாண்டே, அஜய் தம்தா, கிருஷ்ணராஜ், மன்சூக் மாண்ட்வியா, சி.ஆர்.சவுத்ரி, பி.பி. சவுத்ரி,சுபாஷ் பாம்ரே ஆகிய 17 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும் பாரதிய ஜனதா கட்சியான அப்னா தல் கட்சியின் அனுபிரியா சிங் படேல், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராமதாஸ் அத்வாலே ஆகியோர்களூம் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.