* சுவாமிக்கு படைக்கும் சாதத்திற்கும், நாம் உண்ணுகிற சாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்களும் நானும் சாப்பிட்டால் அதன் பெயர் சாதம். சுவாமிக்கு படையல் செய்தால் அதன் பெயர் பிரசாதம்.
* பிரசாதம் என்ற இந்த வார்த்தையிலேயே நல்ல பதில் அடங்கி இருக்கிறது. அரிசியில் வடிப்பதை மட்டும் தான் சாதம் என்று சொல்வோமே தவிர, கோதுமையில் செய்வதற்கெல்லாம் வேறு பெயர்கள் இருக்கின்றன.
* இறைவனான பரமசிவனுக்கு பிச்சை போட்ட அன்னை பராசக்தியின் பெயர் அன்னபூரணி. சாதம் எப்படி அரிசியை மட்டும் குறிக்குமோ அதே போலதான் அன்னம் என்பதும் அரிசியை மட்டுமே குறிக்கும் பெயராகும்.
*அன்னையின் பெயரிலும் அன்னம் இருக்கிறது. ஆண்டவனுக்கு படைக்கும் பொருளின் பெயரிலும் சாதம் இருக்கிறது. எனவே, அரிசியில் சமைத்தால் மட்டும்தான் பொங்கல் இறைவனுக்கு நைவேத்தியம் அதுமட்டுமே ஆகும்.
* மற்ற பொருட்கள் எல்லாம் நமது விருப்பத்தின் அடிப்படையில் படைக்கபடுவதாகும். அரிசி சாதம் மட்டுமே சாஸ்திரப்படி பிரசாதமாக கருதவேண்டும்.