100 வது படத்தை முடித்து சாதனை புரிந்த பிரதாப் போத்தன்.

அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வெற்றிகரமாக 100 படங்களில் நடித்த நடிகர்களின் வரிசையில் தற்போது தன்னை இணைத்துக்கொண்டார்.

Once Upon A Time There Was A Kallan என்ற மலையாளப்படம்தான் பிரதாப் போத்தனின் 100 வது படம். இந்த படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதாப் போத்தன், ரசிகர்களின் மனதில் இடம் பெற்று ஒரு நடிகர் 100 படங்களில் நடிப்பது என்பது தற்போதைய போட்டி உலகில் சாதாரண விஷயமில்லை. என்னுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கும் எனது ரசிகர்களே காரணம். என்னுடைய 100 வது படத்தினை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

களவூர் ஸ்ரீகுமார் கதை ,திரைக்கதை, எழுதி இருக்கும் Once Upon A Time There Was A Kallan  என்ற படத்தை பாசில் முகம்மது இயக்குகிறார்.இந்த படத்தை ஜான் புத்தூர் என்பவர் தயாரிக்கின்றார்.

பிரதாப் போத்தன் இந்த படத்தில் ஒரு வயதான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலட்சுமி நடிக்கிறார். பிரதாப் -ஸ்ரீலட்சுமி தம்பதிகளின் கடைசி கால வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ஒரு திருடனால் அவர்களது வாழ்க்கை நிலை தலைகீழாக மாறிவிடுகிறது. இதுவே இந்த படத்தின் கதைக்கரு.

Leave a Reply